கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவி, பெருகோபனப்பள்ளி, ஐகுந்தம்கொத்தப்பள்ளி, சந்தூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ரூ.56 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மைய கட்டிட பணிகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 4 வீடுகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வீடு கட்டுமான பணிகளை எவ்வித இடையூறுமின்றி கட்டிட பணிகளை முடிக்க வேண்டும் என கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், ஜெகதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளை சரிபார்த்து, பொதுமக்களிடம் நியாய விலைக்கடையில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஐகுந்தம்கொத்தப்பள்ளி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், ஒரு பயனாளியின் வீடு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பெருகோபனப்பள்ளி ஊராட்சி, குட்டூர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.9 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மைய கட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளின் வருகை பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் வருகை பதிவேட்டை முறையாகபராமரிக்க வேண்டும் 6T601 அங்கன்வாடி பணியாளருக்கு அறிவுரை வழங்கினார். குருக்கப்பட்டிகாலணியில் வீடு பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ.70 ஆயிரம் வீதம் 2 பயனாளிகளின் வீடுகள் பழுது பார்க்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை தரமாக முடிக்க பயனாளிகள் முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, காட்டகரம் ஊராட்சி, சந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளின் வருகை பதிவேடு, கர்ப்பிணி தாய்மார்களின் தொடர் கண்காணிப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துபொருட்களின் இருப்புகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.6 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டிட மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .முருகன், .துரைசாமி, ஒன்றிய பொறியாளர்கள் .பூம்பாவை, .முருகேசன், .அருன்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.