ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை,சட்டக் கல்லூரி சார்பில் 75வது குடியுரிமை தின விழா வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.துறைத் தலைவர் பாரதி
வரவேற்று,
அரசியல் அமைப்பு சட்ட முக்கியத்துவம் பற்றி விவரித்தார்.
துணை தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி
கே.ஜெய குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.