குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான 17 – வயதிற்குட்பட்டோர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் M.யோகஸ்ரீ, S.ரச்சிதாதேவி தமிழக அணிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.
இதில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை பாராட்டும் விதமாக திண்டுக்கல் R.S.ரோட்டில் உள்ள மாவட்ட கால்பந்து சங்க அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவர் Ln.Dr.N.M.B.காஜாமைதீன் தலைமை தாங்கி பொன்னாடை போர்த்தி உதவித்தொகை வழங்கினார்.அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளரும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளருமான S.சண்முகம் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் நிறுவனர் V.ஞானகுரு, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொருளாளர் கலைச்செல்வன்,
டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிரகாஷ்,டேபிள் டென்னிஸ் சங்கத்தின் உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டாகள்.