நித்திரவிளை , நவ- 25
குமரி மாவட்டத்தில் பைபர் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் வாங்கி கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் நித்திரவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மற்றும் போலீசார் நேற்று மாலை கல்வெட்டான்கு தி என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் படகுக்கு வழங்கப்படும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 கேன்களில் சுமார் 280 லிட்டர் மண்ணெண்ணைய் இருந்தது.
போலீசார் ஆட்டோ, மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து டிரைவர் தூத்தூர் பகுதியை சேர்ந்த பிஜு (42) என்பவரை கைது செய்தனர்.