வேலூர்_25
வேலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியம் கருகம்பத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் கருகம்பத்தூர் முத்தாலம்மன் கோயில் அருகில் கிராம சபா தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான நிவேதா குமரன் தலைமையிலும் அரசு அலுவலர்கள் முன்னிலையிலும் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கருகம்பத்தூர் ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கௌரவிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் வழங்கினர் .இதில் துணை தலைவர் சிவகாமி கந்தசாமி வட்டார வளர்ச்சி அலுவலர் அ.வின்சென்ட் ரமேஷ்பாபு
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் : நதியா தசரதன், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா ஞானசேகர் ஒன்றியக்குழு தலைவர் மு.பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ராகப்பிரியா சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.