சங்கரன்கோவில்.நவ.24.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் 0.1884, சங்கர நயினார் கோவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் சங்கரன்கோவில் கோயில் வாசல் அருகே புதிய ஆவின் விற்பனை மையம் துவக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை பதிவாளர் (பால்வளம் )சைமன் சார்லஸ் தலைமை வகித்தார். பொது மேலாளர் அருணகிரிநாதன் பால்பத அலுவலர்( பொ) ராஜா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர் . ஆவின் விற்பனை மையம் துவக்க விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆவின் விற்பனை மையத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் உள்ளீடு உதவி பொது மேலாளர் சரவணமுத்து, முதுநிலை ஆய்வாளர் திருமலை செல்வி, உற்பத்தி உள்ளீடு மேலாளர் டாக்டர் சுந்தரம் விரிவாக்க அலுவலர் அனுசியா , சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் ஜெயக்குமார் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.