நீலகிரி மாவட்டம்
ஊட்டியில் ஒகினவா கோஜூ ரியோ சார்பில் 2 ம் ஆண்டு சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா, மலேசியா ஸ்ரீலங்கா நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தாம்பரம் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தை சேர்ந்த போட்டியாளர்கள் களம்மிறங்கி வெற்றி பெற்று தங்ககோப்பை மற்றும் வெள்ளி கோப்பைகளை வென்று சாதனை படைத்தனர்.
இதனை கொண்டாடும் வகையில் தாம்பரம் கிக்ஸ் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பயிற்சி மையத்தின் இயக்குனர் ரென்ஷி வனிதா கார்த்திகேயன். பாராட்டி சான்றிதழ்களை வழங்கி மகிழ்வித்தார்.
இதனைத் தொடர்ந்து கிக்ஸ் கிக்ஸ் அண்ட் பஞ்சஸ் கராத்தே பயிற்சி மையத்தில் நிறுவனர் ரென்ஷி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசும் போது சென்னை போன்ற பெருநகரில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் தனிமையிலேயே வளர்வதால் குழந்தைகள் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். எனவே கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலையை கட்டாயம் மாணவர்கள் கற்றுகொள்ளும்போது, எதையும் சாமளிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். எனத் தெரிவித்தார்.