நாகர்கோவில் நவ 22
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, முக்கோண பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி சுற்றுலா தளத்தினை உலக தரத்திற்கு உயர்த்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளும் கன்னியாகுமரி கடலின் எழிலைக் கண்டுகளிக்கும் வகையில் காந்தி மண்டபம் முதல் திரிவேணி சங்கமம் பகுதி வரை சாய்வுதள சாலை அமைக்கபட்டு பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் விதமாக அவர்களுக்கு கடற்கரை பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த இருக்கைகள் சீரமைக்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.
திரிவேணி சங்கம் முன்பகுதியில் அமைந்துள்ள சுனாமி பூங்காவில் சுற்றுலா பயணிகள் இளைபாறும் வகையில், அங்குள்ள புதர்கள் அகற்றி, சுத்தப்படுத்தி புதிய மரக்கன்றுகள், செடி வகைகள் நடப்பட்டுள்ளதோடு, சுனாமி நினைவு சின்னத்தை சீரமைத்து வர்ணம் பூசி மெருகேற்றப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சுவர்களில் உள்ள பழுதுகள் நீங்கி, வெள்ளை அடிக்கப்பட்டு புது பொலிவுடன் சீரமைக்கபட்டுள்ளது. சுனாமி பூங்காவில் கழிப்பறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாரமரித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாபயணிகளின் நலனுக்காக திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகள்
சாலைகள், பூங்காக்கள், சூரியன் உதயம் பார்வையிடும் பகுதி உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை சுழற்சி துறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெருமின் விளக்கு வசதிகள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள். ஆண், பெண் இருபாலாருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள், கடலில் குளிக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உடை மாற்றும் அறை வசதி, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய கல் படிக்கட்டுகளில் தினசரி காலை, மாலை வேளைகளில் பாசிகளை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை தொடர்;ந்து மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், பேரூராட்சிகள்
உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, துறை அலுவலர்கள். பணியாளர்கள் உட்பட
பலர் கலந்து கொண்டார்கள்.