அரியலூர், நவ;23
அரியலூர் மாவட்டம்,செந்துறை வட்டம்,மணப்பத்தூர் பஞ்சாயத்து சித்துடையார் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நீர்வரத்து வாய்க்காலில் 26 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள 300 , 319 , 321 ,279, 281 , 269 ,263 , 257 , 256/1 சர்வே எண்கள் கொண்ட இடங்களை அரசு உத்தரவின்படி செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் ஹுசைன், வட்டார வருவாய் அலுவலர் வேலுமணி ஆகியோர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் நேரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்தனர். குவாகம் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்