நீலகிரி.நவ.22.
ரெப்கோ வங்கியின் 56வது நிறுவன நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தேசிய வங்கியான தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி 56வது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும், மாறிவரும் காலநிலை மாற்றத்தை மீட்கவும், பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் இவ்வாண்டு வங்கிகள் மூலம் மரம் நடும் பணியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வங்கி கிளையில் இவ் வங்கியின் சார்பில் அ. வகுப்பு உறுப்பினர்களுக்கு சில்வர்ஓக் மரம் மற்றும் நாவல் பழ மரநாற்றுகளை வழங்கினர். கிளை மேளாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் வங்கி பிரதிநிதிகள் பி. எஸ். குமார், தம்பிராஜா, முருகேஷ் , ஆகியோருடன் வங்கி பணியாளர்கள் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர். மரக்கன்றுகள் வழங்கிய ரெப்கோ வங்கி கிளையை பலரும் வாழ்த்திச் சென்றனர்.