நாகர்கோவில் நவ 21
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெரிய விளையில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் அன்மையில் நடந்த திருவிழாவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜேஷ் என்பவருக்கும் ஊர் நிர்வாகத்திற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஊர் நிர்வாகம் பழிவாங்கும் நோக்கில் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட 7 குடும்பங்களை ஊரை விட்டு நீக்கி வைத்து இந்த குடும்பத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நல்ல நிகழ்சிகளுக்கும், அது போல் இறப்பு போன்ற துயர நிகழ்சிகளுக்கும் ஊர் மக்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என ஊர் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறி நாகர்கோவிலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜேஷ் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். மேலும் அந்த மனுவில் என் அம்மா இறந்த போது ஊர் மக்கள் யாரையும் துயர நிகழ்சியில் கலந்து கொள்ளாமல் செய்ததோடு இறுதி சடங்கு நிகழ்சிகளும் நடத்த விடாமல் செய்து விட்டனர் என்றும் ஜனநாயக நாட்டில் இன்னமும் கட்டபஞ்சாயத்து நிர்வாகங்கள் ஊர்களில் நடைபெற்று வருவதாக வேதனை.