கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் வடக்கு ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்
பர்கூர் தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய அவைத்தலைவர் நந்தியப்பன் தலைமையில், பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி ராஜேந்திரன் வரவேற்பில், கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் முன்னிலையில்,
கழக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி கலந்து கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் பெருமாள், ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயபாலன், கிருஷ்ணன், சக்கரவர்த்தி, நரேஷ் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்
கோ.ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் எஸ்.எம் மாதையன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாணவர் அணி செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூயமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனி வெங்கட்டப்பன், பர்கூர் பேரூர் கழக செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், நாகோஜனஹள்ளி பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீதேவி சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் சேகர்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்க்கொடி சுந்தர வடிவேல், சின்னதம்பி, கவிதா பழனி
உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.