தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ. சுப்ரமணி,மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது,2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்
ஆ. மணி, தொகுதி பார்வையாளர்கள், ஒருங்கிணைந்த மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.