தஞ்சாவூர். நவ. 20.
தஞ்சாவூரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் ஆகியவை சார்பில் நடைபெற்ற 57வது தேசிய நூலக வார விழா மகிழ்ச்சி திருவிழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர ன் , டி கே ஜி . நீலமேகம், அசோக் குமார், மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் .கோவி .செழியன் கலந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது 8 பேருக்கும், ஆவணக்குரிசில் விருது 7 பேருக்கு ம் எழுத்துலகின் இளம்பரிதி விருது கள் 6 பேருக்கும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் முழு நேர கிளை நூலகம், கிளை நூலகங்கள் என மொத்தம் 54 நூலகங்களில் வைப்பை வசதி செய்யப்பட்டு வாசகர்கள் பயன் படுத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை புத்தக விழாவாக வாசிப்பின் விழாவாக நடத்துவது தஞ்சைக்கு கிடைத்த பெருமை தமிழ் சமூகத்தை படிக்க வைப்ப தில் ஆர்வம் உடையவர்களாக மாற்றுவதில் பத்திரிகை தொடங்கி விதையாக விதைத்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி என்றால் அது மிகையல்ல..
கருணாநிதி குடியரசு இதழ் படித்து தெரிந்து கொண்டு தொடர்ந்து எழுதியதால் தான் தமிழ் சமூகம் படிக்கும் சமுதாயமாக மாறியது .இதன் மூலம் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47 சதவீத த்தை எட்டி தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
தஞ்சாவூரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
விழாவில் சதய விழாக்குழு தலைவர் செல்வம் ,முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள் திரளாக கலந்து கொண்டனர்.
21 பேருக்கு விருதுகள் திருக்குறள் சோமசுந்தரம், கவிமுகில் கோபாலகிருஷ்ணன் இரா. இரத்னகிரி முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் இளவழகன்,எழுத்தாளர் ராஜவேலு முனைவர் பொன்னியின் செல்வன் எழுத்தாளர் ராமதாஸ் ஆகிய 8 பேருக்கும் வாழ்நாள் சாதனை யாளர் விருதையும் முனைவர் ஜம்புலிங்கம் முனைவர் மணி.மாறன் ,செம்பியன் ,கரந்தை ஜெயக்குமார் அழகிரிசாமி, தில்லை கோவிந்தராஜ்ன், கிளமெ ண்ட் அந்தோணி ராஜ் ஆகிய 7 பேருக்கும் ஆவண குறிசில் விருதையும், இர. மோனிகா, கார்த்திகேயன், மன்னர் மன்னன், சுஜாதா, ரேவதி, செல்வகணபதி ஆகிய 6 பேருக்கும் எழுத்துலகின் இளம்பரிதி விருது வழங்கப்பட்டது
முன்னதாக வாசகர் வட்ட தலைவர் புலவர் கோபாலகிருஷ் ணன் அனைவரையும் வரவேற்றார் நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் முத்து நன்றி கூறினார்