கன்னியாகுமரி நவ 19
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேதுபதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
பிற மொழியினர் தமிழர்கள் மீது செலுத்தும் அரசியல் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து தேசியமொழி தமிழ், தேசிய இனம் தமிழர் எனும் உயரிய கொள்கையை முன்னெடுத்து செல்வது தமிழ் தேசியம்.
ஆனால் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு ,இது திராவிட நாடு என கூறி தமிழர்களை ஏமாற்றி அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது திராவிட கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள்.
இவ்வாறு எதிரெதிர் கொள்கை கொண்ட தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என தவெக தலைவர் விஜய் கூறியது அரசியலில் விஜய் ஒரு கூமுட்டை என்பதை நிரூபிக்கிறது.
இந்த கூமுட்டையால் தமிழக அரசியல் எந்த மாற்றமும் நடந்துவிடாது.
சினிமாவில் அதிகபட்சம் பணம் சம்பாதித்த நடிகர் விஜய் அதற்கு மேலும் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை தமிழக மக்கள் தெரியும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.