சங்கரன்கோவில். நவ.19
சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் உள்ள சலவை தொழிலாளர்கள் சலவை கூடத்தில் சலவை தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் தல கற்கள் பதிக்கும் பணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு தள கற்கள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், சலவை தொழிலாளர்கள் சங்க தலைவர் முனியராஜ், திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், ஜான்சன், விக்னேஷ், மற்றும் சலவை தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் சுடலை, சங்கர் ,ஜோதி, செல்வராஜ் ,செல்வம், முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்