நாகர்கோவில் நவ 18
குமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் விஜய் வசந்த் எம்பியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். உடனடியாக அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட
விஜய்வசந்த் எம் பி தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு முழு திருவுருவ வெண்கல சிலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து வெண்கல சிலை நிறுவுவதற்காக
தனது சொந்த செலவில் 12 லட்ச ரூபாய் வழங்கினார். எனவே படிப்பகத்தில் காமராஜரின் முழு திருவுருவ வெண்கல சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. தற்போது அப்பணி நிறைவுற்றதைத் தொடர்ந்து நேற்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம் பி கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராஜரின் ஐயாவின் வெண்கல சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மேயர் வழக்கறிஞர் மகேஷ்,
மாமன்ற உறுப்பினரும் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவருமான நவீன்குமார், மற்றும் பள்ளிவிளை சந்திரன்,
நாகர்கோவில் மாநகர மண்டல காங்கிரஸ் தலைவர்கள் செல்வன் சிவபிரபு, நாகர்கோவில் மாநகராட்சி
மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, அனுஷா பிறைட்,
வர்த்தக காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார்,
இளைஞர் காங்கிரஸ் குமரி கிழக்குமாவட்ட துணைத்தலைவர் சகாயபிரவின்,
திமுக வட்ட செயலாளர் ஆத்தியப்பன், திமுக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்
உட்பட ஏராளமான காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.