திருமங்கலம் நவ 18 மதுரை மாவட்டம் திருமங்கலம் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் குழந்தைகள் தினவிழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த விழாவில் பராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மு.ஜெகதீசன் தலைமை வகித்தார்.
திருமங்கலம் இலக்கியப் பேரவைச் செயலர் சு.சங்கரன், கம்பன் கழகப் பொருளாளர் பிரசன்னா தி.முருகன், வழக்குரைஞர் மு.பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்
மக்கள் நல சங்கத் தலைவர் இரா.சக்கையா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை உறுப்பினர்
என்.எஸ்.வி. சித்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டுரை,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வின் போது பராசக்தி மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளின் கிராமியக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திருமங்கலத்தை சேர்ந்த சீ.விஜயலட்சுமி,பெ.செந்தில்வேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இறையன்பு நூலக வாசகர் வட்ட பொருளாளர் சுபா அபிராமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முன்னதாக இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நா.பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.நூலக முதன்மை மேற்பார்வையாளர் அ.தமிழ்செல்வன் நன்றி கூறினார். ஆசிரியர்.எம்.செந்தில்,நல்லாசிரியர் .தாமரைசெல்வி,தொல்காப்பியம்.அ.இருளப்பன்,கிளை நூலகங்களின் ஒருங்கிணைப்பாளர் நா.புருசோத்தமன்,இறையன்பு நூலக மேற்பார்வையாளர்.மா.கண்ணம்மாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.