நாகர்கோவில் நவ 18
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் 16.11.2024 மற்றும் 17.11.2024 தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் மாவட்டத்திற்குட்பட்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இரணியல் அரசு நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்தவர்கள்), விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் எதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2025 கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட
அனைத்து வாக்குச்சாவடிகளில் (16.11.2024), (17.11.2024), 23.11.2024 மற்றும் 24.11.2024
(சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்.
தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல்
தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. எனவே மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து
பொதுமக்கள் வாக்காளர் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். மேலும்
வாக்காளர்கள் தங்களது சந்தேகம், கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை வாக்காளர்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.