Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.மேல்புறம் நவ 18
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே சொகுசு கார் பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. இருவர் மருத்துவமனையில் அனுமதி விபத்து குறித்த சி சி டிவி காட்சி வெளியாகியுள்ளது.
மேல்புறம் அடுத்த வட்டவிளை பகுதியில் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) காலை 11:00 மணி அளவில்
ஆறுகாணி அணைமுகம் பகுதியை சேர்ந்த உண்ணி, புளிமூடு கல்லறவயல் பகுதியை சேர்ந்த
விஜயக்குமார் மற்றும் பத்துகாணி பகுதியை சேர்ந்த சஜி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது விபத்து நடந்த பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது லாரிக்கு பின்னால் ஒரு சொகுசு காரும் வந்து கொண்டிருந்தது. இச்சமயம் இளைஞர்கள் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்தை கடந்து செல்லும் போது லாரிக்கு பின்னால் வந்த சொகுசு வாகனம் லாரியை முந்தி செல்வதற்காக வேகமாக முந்த முற்படும்போது இளைஞர்கள் வந்த வாகனத்தில் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த மூன்று பேரும் உடனடியாக மீட்கப்பட்டு வெட்டுமணி(குழித்துறை) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விஜயகுமார் பரிதாபமாக பலியானார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும், சிறிய சாலையில் கார் ஓட்டுநர் தவறாக வாகனத்தை ஓட்டி வந்ததாலும் இந்தப் பெரும் விபத்து நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.