ஈரோடு நவ 19
நந்தா பிசியோதெரபி கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புலமுதல்வா மருத்துவர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவினை நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சணமுகன் தலைமையேற்று பேசுகையில், கல்வி, விளையாட்டு போன்ற பாவுகளில் திறம்பட செயல்புரியும் நலிவடைந்த தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகவும். இக்கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவு கடந்த 29 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன் நோயாளிகளுக்கு இலவச இயன்முறை சிகிச்சை வழங்கி வருகிறது என்றும், இக்கல்லூரியில் கற் காபித்தல் மற்றும் உயர்கல்வி திட்டங்களை அமல்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்படுவதன் காரணமாக தேசிய தரமதிப்பீட்டு குழுவினால் முதல் தகுதி வழங்கப்பட்ட கல்லூரி என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பட்டம் பெறும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
பின்னர், சிறப்பு விருந்தினர் ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புலமுதல்வர் மருத்துவர் டி. ரவிக்குமார் 94 இளங்கலை மற்றும் 11 முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி பேருரையாற்றினார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணிவண்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி முதன்மை கல்வி அதிகாரி முனைவர் ஆறுமுகம் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்.