அரியலூர், மே,:07
அரியலூர் ,பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தலைவர் நடிகர் சீமான் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழலில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க செந்துறை காவல் நிலையம் முன்பு பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் அவர்களின் தலைமையில் கோடை வெயில் வெப்பத்தை குறைக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏற்பாட்டில் கட்சி தொண்டர்கள் உறுதுணையோடு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அதில் நீர் மோர், தர்பூசணி பழம், இளநீர், நுங்கு உள்ளிட்ட பானங்கள் அடங்கிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். பொதுமக்கள் கலந்து கொண்டு பருகி வெயிலின் உஷ்ணத்தை தனித்து சென்றனர்.