நாகர்கோவில் நவ 15
குமரி மாவட்டம்,
நாகர்கோவில் மாநகர மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் மாநகர்
மாவட்ட மகளி்ர் அணி தலைவி சோனி விதுலா தலைமையில்,
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பறக்கை பாலர் பள்ளியில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிமாணவர்கள் மத்தியில் சோனி விதுலா உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜெய விக்ரமன், பகவதி கண்ணு, தலைமை ஆசிரியர் புஷ்பலதா,
மற்றும் நாகர்கோவில் மாநகர மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக துணை தலைவிகள் ஜெபா மற்றும் ஜெனிட்டா கலந்து கொண்டனர். பின்னர்
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.