களியக்காவிளை, நவ, 13 –
களியக்காவிளை அருகே ராணுவ வீரர் தற்கொலை செய்துள்ளார்.
களியக்காவிளை அருகே வன்னியூர் பகுதியை சார்ந்தவர் சுந்தரேசன் மகன் ஸ்டாலின் ஜோஸ் (40) இவர் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மன வருத்தத்தில் மது அருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியை அடித்து வீட்டிற்கு வெளியே துரத்தியுள்ளார். மேலும் வீட்டின் கதவினை அடைத்து வைத்து விட்டு தூக்கில் தொங்கியுள்ளார். மறுநாள் காலை தகப்பனார் சுந்தரேசன் வந்து கதவினை தட்டியுள்ளார். கதவு திறக்கவில்லை இதனால் அக்கம்பக்கத்தினர் கதவினை உடைத்து உள்ளே பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இத்தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.