திருப்பத்தூர்:நவ:13, திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கரி ஆர்பாட்டத்தின் நோக்கத்தினை பேசினார்.அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூவண்ணன், முன்னாள் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் அ.சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் திருமால், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில்: நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வயது மூப்பு அடிப்படையினை வைத்து தற்போது நடந்து முடிந்த 2021- தேர்தலின்போது அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் போராடி வரும் நிலையில் நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்வதோடு ஓய்வூதிய திட்டத்தினை முறைப்படுத்த வேண்டும். ஊழியர்களின் உழைப்பிற்கு தகுந்தார் போல் சம்பள உயர்வினை வழங்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று கோசங்களை எழுப்பினார்கள். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அலங்காயம் ஒன்றிய தலைவர் L .பழனி, ஒன்றிய செயலாளர் பிரபா மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.