நாகர்கோவில் நவம்பர் 12
குமரி மாவட்டதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு சட்டத்தின்படி, அனைத்து வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தல் அவசியமானதாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் சேகரித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து ஒட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 20.11.2024 க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆதார் அட்டை நகல், சமீபத்தில் எடுத்த பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் -2, RC புத்தகம், இன்சுரன்ஸ் நகலுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.