வேலூர்=12
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 568 பயனளிகளுக்கு ரூ.375 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்களும். வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. து.மு. கதிர் ஆனந்த் அவர்களும் கொண்டசமுத்திரம் ஆர்.ஜி.மு. திருமண மண்டபத்தில் இன்று (11.11.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன், ஒன்றியக்குழுத்தலைவர்கள் திரு ரவிச்சந்திரன் (கீவகுப்பம்). திரு. என் இ சத்தியானந்தம் (குடியாத்தம்). கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திரு. சீதாராமன், திரு. சோபன் பாபு. திருமதி மீனாம்மாள். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு. கலியமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.