தென்தாமரைகுளம்., நவ. 12.
குமரி மாவட்டம் தென் தாமரை குளம் உதயம் புறா கிளப் சார்பில் நடைபெற்ற 40– ம் ஆண்டு புறா பந்தய போட்டியில் வெற்றிபெற்ற உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா தென்தாமரைகுளம் றிங்கல்தௌபே ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.போடியில் 16 மணி 21 நிமிடம் பறந்த புறாவின் உரிமையாளர் சாமி தோப்பு ராம்ஜி-க்கு முதல் பரிசாக ரொக்கம் ரூபாய் 20,000/-மற்றும் சுழல் கோப்பையை கிளப் தலைவர் வழக்கறிஞர் வீரமோகன்ராய், அ.தி.மு.க விவசாய பிரிவு கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.பாலமுருகன், டாக்டர்.நோயல் கண்ணன்,வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன்,சவுந்தர்ராஜன்,கிளப் செயலாளர் ஆன்றனி, பொருளாளர் துரைராஜ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.இரண்டாம் பரிசு பெற்ற சந்த்ருவுக்கு ரூபாய் 12000/-ம் மற்றும் பரிசு கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற ராஜசேகருக்கு ரூபாய் 7000/- மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.இந்த விழாவில்
நூற்றுக்கும் மேற்பட்ட கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினவு பரிசு வழங்கப்பட்டது.