நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்து மலை காய்கறி பயிர்களான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியன அதிகமாக பயிரிடப்படுகின்றன.
அந்த வகையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் மலை காய்கறி உற்பத்தி செய்யும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்துறை கேர்கம்பை எரிசபெட்டா மிளித்தேன் கட்டபெட்டு தொட்டன்னி பகுதிகளில் கேரட் ஆகிய பயிர்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது ஊட்டி காய்கறி மண்டி மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் விலை கிலோ ரூபாய் 110 க்கு கொள்முதல் விலையாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.