திருப்பத்தூர்:நவ:12, திருப்பத்தூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இர. முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சா.ஹரி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் K. திருநாவுக்கரசு கண்டன உரையில் நோக்கங்களை எடுத்து கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது கடந்த 2011 -2012 கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 216 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு பள்ளி மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய். 12,500 ஊதியத்தில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதுவரையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என கோஷங்களை எழுப்பியதோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 2016 வ.எண்.191 மற்றும் 192 மற்றும் 2021 இல் வ.எண்:181 இல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறினார்கள். இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக பணி நிரந்தர கோரிக்கை நிறைவேறாமல் உள்ளமையால் 12000 மேற்பட்ட அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வயது மூப்பின் அடிப்படையிலும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கத்தினை எழுப்பினார்கள். பணி நிரந்தரம் அறிவிப்பு செய்யப்படாத நிலையில் 12000 பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் செய்து அரசின் கவனத்தை பெற்று பணி நிறைவு கோரிக்கை நிறைவேற்ற முயல்வோம் என்று கூறினார்கள். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தினை முடித்துக் கொண்டு அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுவினை அழித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக நேரடியாக மனுவினை அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் செயலாளர் G. ஸ்ரீனிவாசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் மாதனூர் கோவிந்தராஜ், ஆலங்காயம் லோகநாதன், நாட்றம்பள்ளி ஜெயதிருமாள், ஜோலார்பேட்டை சஞ்சய் காந்தி, திருப்பத்தூர் கீதா என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.