திண்டுக்கல்லில் தமிழக ஆயர்பேரவையின் BC MBC DNC பணிக்குழு தலைவரை கிறிஸ்தவ வ ன்னியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர்
தமிழக ஆயர் பேரவையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பணி குழுவின் தலைவராக புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய திண்டுக்கல் மதுரை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களை தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ வன்னியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு தங்களது இனத்திற்கு தேவையான விஷயங்களை கோரிக்கை மனுவாக அளித்தனர்.
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி மாநில இணை செயலாளர் மோசஸ் பால்ராஜ் ஜஸ்டின் திரவியம் மாநில பொருளாளர் ஆரோக்யராஜ் மாநிலத் துணைத் தலைவர்கள் ராயப்ப ரமேஷ், ரக்சன் மாநில துணைச் செயலாளர் ஸ்டீபன், ஜோசப் சௌந்தர் ஆலோசகர் அற்புதமணி உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மேட்டுப்பட்டி யாக்கோபு, கொசவபட்டி சிறுமணி புகைப்பட கலைஞர் ஜஸ்டின், சகாயராஜ் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் இன்னாசி ராஜா திருவண்ணாமலை மாவட்ட கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நலச் சங்கத்தின் தலைவர் அந்தோணிசாமி செயலாளர் மைக்கேல் பொருளாளர் சுவைக்கின் துணைத் தலைவர் செங்கோல் கள்ளக்குறிச்சி மாவட்ட கிறிஸ்தவ வன்னியர் முன்னேற்ற நல சங்கத்தின் கௌரவத் தலைவர் தேவராயப்பன் தலைவர் பிரான்சிஸ் செயலாளர் ஜெரால்டு பொருளாளர் அந்தோணி ராஜ் இவர்களுடன் சுமார் 50 பேர் கலந்து கொண்டு கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கான பணிகளை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு தொழில்துறையில் சரியான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆயர் அவர்கள் விரைவில் மாநில செயலர் அவர்களின் செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்பாடுகளை விரைவாக இணைந்து செய்வோம் என்று தெரிவித்தார்