புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
மாநில விவசாய அணித் தலைவர் துவார் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து துவார் ரெங்கராஜன் கூறியதாவது.
கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். ஆணைக்கிணங்க புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் தமிழரசன் மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோரின் ஆலைசனையின் பேரில்
இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெள்ளாழவிடுதி. கருப்பட்டிபட்டி காந்திநகர் கருக்காகுறிச்சி மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி துவார் கிராமம் குளவாய்பட்டி கல்லுபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களை தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தில் இனைத்து கொண்டனர்.
மேலும்
தமிழகத்தில் வரும் காலத்தில் நேர்மை எளிமை தூய்மை வெளிப்படைதன்மை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் தமாகா ஒரு மாபெரும் சக்தியாக விளங்கும் எனவும் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்ட மன்ற தேர்தலில் தமாகா சிறப்பான முறையில் தங்கள் பலத்தை நிருபிக்கும் வகையில் தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன். அயராது உழைத்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவரது வழியில் நாங்கள் பயணித்து சிறப்பாக செயல்படுவோம் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் கறம்பக்குடி வட்டாரத் தலைவர் ஜெயராஜ் மற்றும் சுரபி கருப்பையா ராஜப்பன். தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.