புதுக்கடை, நவ.10-
காப்புக்காடு பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக நிலங்களை யும், வீடுகளையும் , வாழ்வாதாரத்தையும் இழந்து உரிய இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் மற்றும் நான்கு வழிச்சாலை போராட்ட குழுவினர் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினு லால் சிங் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுபதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ்குமார் எம் எல் ஏ , குமரி எம்.பி விஜய் வசந்த் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போராட்ட குழு தலைவர் விஜயராஜ் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன், விளாத் துறை மகிளா காங்கிரஸ் தலைவி அனிதா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4 வழிச்சாலையில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கத்து கிராமங்களுக்கு வழக்கப் பட்ட அதே இழப்பீடு தொகை வழங்க வேண்டும், மேலும் 2018 ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அனைத்து பாதிக்க பட்ட மக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு ஒரு உத்தரவு வழங்கி உள்ளார்கள்.
அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவையும் மதிக்காமல் திட்ட இயக்குநர், வேல்ராஜ் என்பவர் பாதிக்கப் பட்ட மக்களுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு , விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.
மத்திய நெடுஞ்சாலைதுறையானது.
அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உரிய இழப்பீடு வழங்காமல் வரும் திங்கட் கிழமை 11.11. 2024 அன்று காவல் துறை உதவியுடன் நீதிமன்றத்துக்கு கட்டு படாமல் மேற்படி நிலங்களில் வேலையை ஆரம்பிக்கும் முயற்சி செய்கின்றார்கள்.
இதை கண்டிக்கும் விதமாக பாதிக்கப் பட்ட மக்கள் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைத்து மாபெரும் கண்டன தர்ணா போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது.