நாகர்கோவில் நவ 9
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள் ஆகியவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
காவல்துறை துணை தலைவர் ஆய்வின்போது அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார். ஆய்வின்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உடனிருந்தார்.