தென்காசி நவ 9
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த திருநங்கை வானதி என்பவர் அரசு தேர்வு எழுதி அரசு வேலைக்கு செல்ல செங்கோட்டை காவல் ஆய்வாளர் அவர்களிடம் உதவி நாடினார். உடனே ஆய்வாளர் தென்காசி ஆகாஷ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்து கொள்ளுமாறு அனுமதி வாங்கி கொடுத்ததோடு, அவர்களிடம் தடம் மாறிபோகாமல் நன்றாக படித்து அரசு பணியில் சேர அறிவுரை வழங்கி முன்னேற வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருநங்கையை தனது ஆகாஷ் அகாடமியில் சேர்த்த அகடாமியின் முதல்வருக்கும் காவல் ஆய்வாளருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.