நாகர்கோவில் நவ 9
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் போதை எதிர்ப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் போதை எதிர்ப்பு பாதகை மற்றும் கையேட்டினை வழங்கி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் போதை பழக்கத்திற்கு அடிமையாகத் தமிழ்நாட்டை அமைத்திடவும், சமூகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான கல்வியையும், விழிப்புணர்வையும் அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி பருவத்தில் ஒரே ஒரு தடவை, இன்று ஒரு நாள் மட்டும் என்று எதார்த்தமாகவோ. போதை பொருட்களை உபயோகிப்பதினால் போதைக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். பெரும்பாலும் சாக்லெட் வடிவிலான போதைப்பொருட்களை அருந்துகிறார்கள். கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வர வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் மாறுபட்டால் உற்ற நண்பனாக இருந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகங்கள். கடைகள் ஆய்வு மேற்கொண்டு. தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப்பொருட்களான பான்மசாலா, குட்கா, Cool Lip முதலியன விற்பனை செய்யப்படுகிறதா விற்கப்பட்டால் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.22,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குழந்தைகள் உதவி எண் 1098 ல் புகார் அளிக்கலாம். மேலும் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள். பொறியியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் போதை தடுப்பு குழுக்கள் அமைப்பட்டு, ஒரு குழுவில் 20 மாணவ மாணவிகளும், 5 பேராசிரியர்களும் இடம்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு செயல் திட்டத்தின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரிகளில் போதை தடுப்பு குழுக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகள். கல்லூரிகள் முன்பு போதை தடுப்பு நடவடிக்கைக்காக காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா உறுப்பினர் சங்கர், நாகர்கோவில்
அண்ணா பல்கலைக்கழக முதல்வர் முனைவர்.நாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு பிரிவு) சந்திரசேகரன், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.