கிருஷ்ணகிரி, நவ;09. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் வரவேற்புரையாற்றினார். மேலும் சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்கள் ஜெய்சங்கர், சிவகுமார், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர் கணபதி, வேப்பனப்பள்ளி தொகுதி துணை செயலாளர் கார்த்திக், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய குதிபாலா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த கிருஷ்ணன் என்பவருடைய நிலத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து அவரது விவசாய நிலத்திற்கு பயன்படுத்தக்கூடிய பல லட்சம் மதிப்புள்ள பிவிசி பைப்புகளை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது எஸ்சி/ எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகிற காவல் துறை அதிகாரிகளை கண்டித்தும் டி.கொத்தபள்ளி கிராமத்தில் ஆதி திராவிடர் மக்களை அச்சுறுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நபர்களை கண்டித்தும், பேரிகை காவல் நிலையத்தில் தலித் விரோத போக்கை கடைபிடிக்கக் கூடிய காவல் அதிகாரிகளை கண்டித்தும், காவல்துறையில் SBCID ஆக பணிபுரிகின்ற காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தவறான தகவல்களை சொல்லி தலித் விரோத போக்கை கடைபிடிக்கக்கூடிய அதிகாரிகளை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை கண்டித்தும், கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக ஒன்றிய செயலாளர் காவேரிப்பட்டினம் செல்வம், திராவிட விடுதலைக் கழக மாநில நிர்வாகி ராஜேஷ், தேசிய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சந்திரமோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருகம்மாள், ஒன்றிய செயலாளர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் கௌரம்மாள், பலராமன், கோபி, சேட்டு, சிலம்பரசன், பவுல், சண்முகம், தனுஷ், சிவப்பிரகாஷ், கிருஷ்ணன், முரளி, செல்வராஜ், உள்பட 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மாவட்ட, மாநில, சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர செயலாளர், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஏராளமானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics