நிலக்கோட்டை,ஏப்.06:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த விடுவீடு பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நேற்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும்,திமுக துணைப் பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி வருகை தந்தார்,அவரை சந்தித்த நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையிலான நிர்வாகிகள் வத்தலக்குண்டு பிரமலைக்கள்ளர் உறவின் முறை பேரவை செயலாளர் நாகேந்திரன்,தமிழ்நாடு கள்ளர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மதுரை மாவட்டச் செயலாளர் தீனன் ஆகியோர்கள் முன்னிலையில் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல்,மதுரை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் உரிய பரிசீலனை செய்யக்கோரி மனு அளித்தனர்,இதனைப் பெற்றுக் கொண்ட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தற்போது செயல்பட்டு வரும் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இன்றி கல்வித்துறை அமைச்சரிடம் எந்த விதத்திலும் குறைஇன்றி நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்ய முயற்ச்சிக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது உடன் பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் முருகன், பொருளாளர் இளங்கோ, நிர்வாகிகள் தோழமை அமைப்புகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.