தஞ்சாவூர். நவ.7.
மேட்டூர் அணையில் தண்ணீர் உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் முறை பாசனம் கடைபிடிக்கப்படு வதை கைவிட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ,விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்.:
திருவோணம் சின்னத்துரை :
திருவோணம் ,பேராவூரணி பகுதியில் போலி பட்டா பதிவு செய்வது இன்னும் தொடர்கிறது இன்றைக்கு ஒருவர் பெயரில் இருக்கும் பட்டா நாளை அவர் பேரில் இல்லை என்ற நிலை தான் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் :
தவறு செய்த சார்பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், இரு கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு ள்ளனர்.
திருப்பரம்பியம் தியாகராஜன்:
சாக்கோட்டை உழவர் பயிற்சி மையம் மூலம் விவசாயிகளிடம் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டது ஆனால் தற்போது அந்த மையம் மோசமான நிலையில் உள்ளது எனவே உழவர் பயிற்சி மையத்தை மேம்படுத்த வேண்டும்.
சுவாமிமலை சுந்தர. விமல். நாதன்:.பயிர் காப்பீடு செய்வதற் கான கால அவகாசம் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளது நிலையில் சிட்டா, அடங்கல் வழங்குவதில் நிலவும் இரட்டை நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும்.
அருமலைக்கோட்டை சீர் தங்கராசு:
கல்லணை கால்வாயில் இருந்து பாயும் வடசேரி வாய்க்கால் மேடாக உள்ளது .இந்நிலையில் கல்லணை கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் பாய்வதால் வடசேரி வாய்க்கால்களுக்கு பாய்வதில்லை எனவே கல்லணை கால்வாயில் முழு அளவுக்கு தண்ணீர் விட வேண்டும்.
பொன்னவராயன்கோட்டை வீரசேனன் : மேட்டூர் அணையில் நீர்மட்டம் 107 அடிக்கு இருக்கும் போது டெல்டா மாவட்டங்களில் முறையான பாசனம் வைக்க வேண்டியது இல்லை.முறை பாசனத்தால் இன்னும் பல இடங்களில் நடவு செய்ய முடியாத நிலை உள்ளது .எனவே முறை பாசனத்தை கைவிட்டு அனைத்து ஆறுகளிலும் முழுமையாக தண்ணீர் விட வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 15 ஆம் தேதி என்பதை 30ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும்..
இதன்பின் முறைப்பாசனம் குறித்து மறு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீர் வளத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். மேலும் பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு குறித்து மேலிடத்திற்கு கடிதம் எழுதுமாறு வேளாண் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்
கக்கரை சுகுமாரன்.கடந்த ஆண்டு மேட்டூர் அணை அக்டோபர் மாதமே மூடப்பட்டதால்,நடவு செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு செய்வதும் இழப்பீடும் கிடைக்க வில்லை. இது தொடர்பாக தொடர்ச்சியாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாபநாசம் செந்தில்குமார் :நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் எடை , மூட்டைக்கு ரூபாய் 40 என முறைகேடுகள் நிகழ் கின்றன.
இது போன்ற புகாரர்களுக்கு உள்ளாகும் கொள்முதல் நிலைய பணியாளர்களை கருப்பு பட்டியில் சேர்த்து தற்காலிகமாக அல்லாமல் முழுமையாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.