கன்னியாகுமரி மே 6
தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் தன்னுடைய தாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வகையில் கோடை காலம் நெருங்குவதற்கு முன்பாகவே பெரும்பாலான மாவட்டங்களில் அனல் பறக்க துவங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு வகையான நலப்பணிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிஸ்கட் வழங்கி ரத்ததான முகாம் நடத்துவது, 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கியது . அதன்பிறகு ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் போன்றவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவையாகும். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் நல்லாசியுடன்
மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வாழ்த்துக்களோடு குமரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர் சிவா, வாழ்துகளோடு ஒருகிணைப்பாளர் ஜில்லா ராஜேஷ், தலைமையில் மாவட்டதொழிலாளர்அணி தலைவர் யோகானந்த, ஆலோசனையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் ஆனந்த் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளின் ஏற்பாட்டில் வெப்பத்தை தணிக்கும் வகையில் அழகப்பபுரம் 5வது வார்டில் தண்ணிர் பந்தல் திறக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் தண்ணீர் பந்தலில் தண்ணீர், மோர் ஆகியவை இருக்கும் எனவும் இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.