திண்டுக்கல்லில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் ஏழை, எளியோருக்கு வேஷ்டி, சேலை மற்றும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் கூட்டுறவு நகரில் உள்ள VG ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் மனிதநேயம்
V.ஞானகுரு தலைமை தாங்கினார்.தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் S.ஜான் ஆரோக்கியசாமி, ஆயுள் உறுப்பினர் V.டால்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் N.நாகுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாவட்ட பொருளாளரும், மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவருமான நாட்டாண்மை Dr.N.M.B. காஜாமைதீன் , முன்னாள் கால்பந்து வீரரும், திண்டுக்கல் கிழக்குப் பகுதி திமுக செயலாளருமான A.இராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளியோர்கள் 80 பேருக்கு வேஷ்டி, சேலைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேருக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்கள். நகரச் செயலாளர் K.முத்துகனகராஜ் , நகர பொருளாளர் D.மணிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாவட்ட செயலாளர் J.ரவீந்தரன் (எ) மதி நன்றி கூறினார்.