சென்னை, நவ- 06,
உலகளவில் பெரும் புகழ்பெற்ற லைஃப் ஸ்டைல் பிராண்டான சுவிஸ் மிலிட்டரி, டிராவல் கியர் பிரிவில் அதன் தயாரிப்பு வரிசையின் விரிவாக்கத்தை
ஹைதராபாத் மற்றும் சென்னையின் தென்னிந்திய சந்தைகளை கவரும் வகையில் கண்கவர் வண்ணங்களில் , தரத்துடன் , மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் மிலிட்டரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அனுஜ் சாஹ்னி தெரிவித்ததாவது:-சுவிஸ் மிலிட்டரி கியர் எஸ்.கே.யூ மாடல்களான
ஸ்டார், எட்ஜ், மேஸ், கால்வின், கைனடிக், க்யூபாய்டு, சஃப்பையர், ஜூபிடர், டேப்பர், ஹீலியம், குக்கூன், டெர்பி, ஸீட்டா மற்றும் மண்டலா போன்ற அதிகளவில் விற்பனைக்கு சந்தையில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், இந்திய லக்கேஜ் & பைகள் சந்தை மதிப்பு அமெரிக்க டாலரில் 15.04 பில்லியன் ஆகவும், 2024 முதல் 2028 வரையிலான காலகட்டத்தில் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 5.21% ஆகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
டிராவல் கியர், ஸ்மால் கன்ஸ்யூமர் அப்ளையன்சஸ் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் ஒரு விரிவான பல்வேறு வகைப்பட்ட அதன் உடைமைப்பட்டியல், நம்பகத்தன்மை, தரம் மற்றும் நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது.
நாடு முழுவதுமான பிராண்டின் வலுவான இருப்பில், டெல்லி, பஞ்சாப், ஜே&கே, ஹிமாச்சல், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒரிசாவில் 2000+ க்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்கள் உள்ளடங்கியிருப்பதோடு 2 மற்றும் 3 ஆம் அடுக்கு நகரங்களுக்கும் விரிவடைந்து வருகிறது. உள்நாட்டு சந்தையில் அது விளைவித்துவரும் தாக்கம், மலிவு விலை பிரீமியம் லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர்களை இணைக்கிறது என்று தெரிவித்தார்.