தூத்துக்குடி விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு மேலாளர் எம்.ராஜலட்சுமிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ பாராட்டு தெரிவித்தார்.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 50 பெண் சாதனையாளர்கள், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் தலைவர் திரெளபதியை இன்று நேரில் சந்தித்தனர். இதில், தூத்துக்குடி விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு மேலாளர் எம்.ராஜலட்சுமி உட்பட பெண் சாதனையாளர்களை குடியரசு தலைவர் பாராட்டி அவர்களுக்கு விருந்து அளித்தார்.