தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5% ல் இருந்து 7% ஆக உயர்த்த வேண்டும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய நவம்பர் 16 ம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது அதிமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றாறை பாதுகாக்க வேண்டும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுவதை தடுத்து வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புளியங்குடியில் எலுமிச்சை குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் அனைத்து தரப்பு மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தென்காசி மருத்துவக்கல்லூரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்
2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும் தற்போதைய திமுக அரசு வெறும் அறிக்கை அரசாகவே உள்ளது பெரும்பான்மையான சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று அவர்களால் ஆட்சி அமைத்து அவர்களையும் திமுக அரசு கைவிட்டு உள்ளது
தவெக மாநாட்டில் அந்த கட்சி தலைவர் விஜய் அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை உங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு தேர்தல் காலத்தில் தான் கூட்டணி முடிவு அமையும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி இன்னும் பலமாக அமைய வேண்டுமா என்று கேட்டதற்கு தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 1.5% வாக்குகள் அதிகம் பெற்றதில் இருந்தே தெரியும் அதிமுக கூட்டணி பலமாக தான் உள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்வின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நெல்லை மண்டல தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட துணைத்தலைவர் யாசர்கான், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர்கள் முத்துமுஹம்மது, நூர் முஹம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது நைனார், வேளாண்அணி மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம், சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் ஷேக்முஹம்மது, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி, தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் பீர்முஹம்மது, தென்காசி நகர தலைவர் பாதுஷா, நகர செயலாளர் ஷேக்மைதீன், நகர துணைச்செயலாளர் ஜாஹிர் உசேன், கடையநல்லூர் நகர தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.