தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.