கீழக்கரை மே 06-
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் காட்டுமாடுகளைக் கட்டுப்படுத்தும் முறையை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் ஹெர்போலிவ் என்னும் மருந்து குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. மேலும் மாணவி தாமரைச்செல்வி கூறுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெர்போலிவ் என்னும் மருந்தினை தெளிப்பதினால் காட்டு விலங்குகளான காட்டு மாடு எருமை காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றார். கோனேரி கிராம விவசாய இடங்களில் நூற்றுக்கணக்கான காட்டு மாடுகள் இரவு நேரங்களில் பயிர்களுக்குள் நுழைந்து பெரும் சேதத்தினை ஏற்படுத்துவதாக கிராம விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் காட்டு விலங்கு பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்கும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுப்பதற்கும் செய்முறையினை இங்கு செய்து காட்டுகிறோம் என்றும் இதனைப் பயிர்களுக்கு தெளிப்பதனால்
பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார், அதனை தொடர்ந்து பயிர்களுக்கு வளர்ச்சிக்கு உதவியாக செயல்படும் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.