நாகர்கோவில் அக் 31
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்தார் வல்லபாய்
பட்டேலின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என அனைவரும் ஏற்றுகொண்டார்கள்.
இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில், ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலர் (பொது) சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல்முருகன், அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.