ராமநாதபுரம், அக்.31- இராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். எல்லை வரையறை பிரச்சனை என்ற பெயரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் இருக்கும் இவர்களை மீட்க திமுக அரசு எவ்வித முயற்சிகளையும் இதுவரை முன் எடுக்கவில்லை.
இந்நிலையில் அந்த குடும்பத்தை தவிக்கவிட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் தற்போது மிகவும் கடினமாக சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் உடனடியாக தனது சொந்த நிதியில் இருந்து நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறியதுடன்… அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் மூலம் மீனவர்கள் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மீனவர்கள் குடும்பத்தினரிடம் தைரியம் கொடுத்து பேசினார்.