நாகர்கோவில் – நவ- 03,
முருகன் கோவில்களில் நடக்கும் முக்கியமான விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழ குஞ்சன் விளை ஊர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில்
நேற்று காலை ஏராளமான முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள். கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று காலை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் , விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், யாகசாலை பூஜை, அலங்கார தீபாராதனை, போன்றவைகள் நடந்தது. இந்த கந்த சஷ்டி திருவிழாவின் 6-வது நாளான வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் வெள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது . பின்னர் 10-வது நாள் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.