தஞ்சாவூர். நவ.3
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இடதுசாரிகள் பொது மேடை சார்பில் மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்டடு, தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழர் மரபை உயர்த்தி பிடிப்போம், இந்தி – சமஸ்கிருதத் தை விரட்டி அடிப்போம் மனுதர்ம – சனாதன கொள்கைகளை முறியடிப்போம் போன்ற உறுதி மொழிகளை கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உலக தமிழர் பேரவையின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்தார் இடதுசாரியில் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் முதுமுனைவர் இளமுருகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் வடிவேலன் மக இக மாநில இணைச் செயலர் ராவணன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலர் ஜெயினுல் ஆப்தீன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலர் முருகையன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி முகிலன், சி ஐ டி யு செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதே போலதமிழ்நாடு மொழி வழி இனம் தாயகமாக அமைந்துள்ள நாளையொட்டி தமிழ் தேசிய பேரியக்க அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.